யாழ் கைதடி இரவு விபத்து: பொலிஸ் அத்தியட்சகர் பலி

0
240

யாழ் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (19-04-2023) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் | Jaffna Kaithady Accident Assistant Police Died

கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதி வீதியில் வீழ்ந்துள்ளார்.

யாழில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் | Jaffna Kaithady Accident Assistant Police Died

இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது. உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் | Jaffna Kaithady Accident Assistant Police Died

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி மற்றும் பாரவூர்தியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் | Jaffna Kaithady Accident Assistant Police Died