நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் யுவதி

0
266

நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்த யுவதியின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்

கடந்த 2 ஆம் திகதி நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் முன்னாள் காதலனால் பல் மருத்துவரான குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக நோர்வே பொலிஸார் கூறியுள்ளனர்.

நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் யுவதி; மரணம் குறித்து வெளியான தகவல் | Jaffa Girl Who Tragically Died In Norway

அத்துடன் சந்தேக நபரான இளைஞரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காருக்குள்ளிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலை சந்தேக நபரான இளைஞர் தொடர்பில் யுவதி பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள இளைஞருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பு அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.