கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மைத்திரிபால சிறிசேன இழந்தமை நல்லது என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அந்த வீட்டுக்காகவே பொலன்னறுவையில் இருந்து அவர் வந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் எனவும் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலன்னறுவைக்காக மாத்திரம் செயற்பட்டதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.