இஸ்ரேல் பிரதமர் ஹிட்லருக்கு நிகரானவர்: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

0
336

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ஹிட்லருக்கு இணையானவர் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன்(Tayyip Erdogan) விமர்சித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி பொது மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையானது ஹிட்லர் மக்களை படுகொலை செய்தமைக்கு இணையானது.

ஹமாஸ் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவில் பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காஸா மீது தாக்குதல் நடத்த கட்டளையிடும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ உட்பட அனைவரையும் சர்வதேச போர் குற்ற விசாரணை நீதிமன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.