பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்..

0
196

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரின் வீட்டு உரிமையாளர், அவருடன் வசித்து வரும் நண்பரிடம் வாடகை கேட்டது சர்ச்சையாகியுள்ளது.

இஸ்ரேல் காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, வான்வழித்தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் தங்கி படித்து வந்த இன்பர் ஹைமன் என்ற இளம்பெண், ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதத்திற்கான வாடகை

அவர் தனது ஆண் நண்பரான நோம் அல்லானுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இன்பர் பிணைக்கைதியாக பிடிபட்டதால் அவரால் கடந்த மாதத்திற்கான வாடகையை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அவரின் வீட்டின் உரிமையாளர் வாடகையை செலுத்துமாறு இன்பரின் நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

மேலும், நடந்த விடயத்தை நோம் விளக்கியபோதும், அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் நீங்கள் 2,500 ஷேக்கில் (இஸ்ரேல் பணம்) தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர் | Landlord Demands Rent Woman Held Hostage Israel

சமூக வலைத்தள பதிவு

இந்த உரையாடலை நோம் அல்லானின் தந்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் வீட்டு உரிமையாளர் மன்னிப்பு கேட்க நேரம் வேண்டும் என்பதற்காக நான் அவரது பெயரையும், தொலைப்பேசி எண்ணையும் பதிவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தை வீட்டின் உரிமையாளர் மறுத்துள்ளதோடு, அப்பெண்ணின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

அவர் பத்திரமாக இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றே அவர்களது பெற்றோரை போல நானும் விரும்புகிறேன் என உரிமையாளர் கூறியதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.