இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்: இரண்டு துண்டாக்கப்பட்டுள்ள காசா நிலப்பரப்பு

0
231

காசா பகுதி முழுவதும் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி ‘இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன என்றும் இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டும் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள்

இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்: இரண்டு துண்டாக்கப்பட்டுள்ள காசா நிலப்பரப்பு | Israel Hamas War Updates Gaza Strip

கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகின்றது. இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.