காசாவில் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம்!

0
251

இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் காசாவை சுற்றிவளைத்து படையினர் அதன் உள்ளே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

காசாவின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம்! | Israeli Army In The Heart Of Gaza

அத்துடன் காசா மக்களை தயவு செய்து தெற்கிற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலையடுத்து இஸ்ரேலும் ஹாமாசுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது.

இந்த சம்ரால் இரு தரப்பிலும் 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

காசாவின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம்! | Israeli Army In The Heart Of Gaza