உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவுள்ள இஸ்ரேல்

0
454

ரஷ்ய படைகளால் தாக்கப்பட்ட உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக இஸ்ரேல் அரசு உக்ரைனுக்கு உதவ முன்வந்தது.

மனிதாபிமான உதவியாக, குண்டு துளைக்காத உள்ளாடைகள் மற்றும் தலைக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க உத்தேசித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்தார்.