ஈரானின் ஆறு ஏவுகணை ஏவுதளங்களை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்! வலுக்கும் போர் பதற்றம்

0
34

ஈரானின் ஆறு பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் (Ballistic Missile Launchers) அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய வான்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தாக்குதலில் ஏவுகணை ஏவுதளங்கள் அழிகப்பட்டதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய நிலப்பரப்பை இலக்கு வைத்து ஏவுகணைகளை ஏவுவதற்குத் தயாராக இருந்த நிலையிலேயே இந்த ஆறு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களையும் முன்கூட்டியே இனங்கண்டு அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஏவுகணை ஏவுதளங்களுக்கு மேலதிகமாக, ஈரானின் “மூன்று அதிநவீன பாதுகாப்பு கட்டமைப்புக்களை” (Advanced Defense Systems) அண்மைக்காலத் தாக்குதல்கள் மூலம் அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.