அடுத்த அதிபர் மகளா, சகோதரியா? வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்!

0
26

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகளான கிம் ஜு ஏ (Kim Ju Ae) அந்நாட்டின் அடுத்த அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்தப் பதவிக்கு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும் (Kim Yo Jong)  போட்டியாக இருப்பார் எனவும் இதனால் வாரிசுரிமை போர் நடைபெறும் என கூறப்படுகின்றது. வடகொரியா பற்றிய அரசு செய்திகள் பெரும்பாலும் வெளியுலகிற்குக் கசிவதில்லை.

அந்நாடு பற்றிய அனைத்துச் செய்திகளும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். அதையும் மீறி வந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். எனினும் தென்கொரியா வடகொரியா தகவல்கள அவ்வப்போது கசியவிடும்.

அந்த வகையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் (Kim Ju Ae) வடகொரியாவின் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா தெரிவித்திருந்தது. சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் சீன அதிபருடனான சந்திப்பு என முக்கிய நிகழ்வுகளில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜுஏ (Kim Ju Ae) முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் கட்சி மாநாட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக மாறும்பட்சத்தில் அது குடும்பத்திற்குள் வாரிசுரிமைப் போரை தூண்டக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் வட கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அதிபர் கிம்மின் 38 வயது சகோதரியான கிம் யோ-ஜாங் (Kim Yo Jong) கருதப்படுகிறார். கிம் யோ-ஜாங் (Kim Yo Jong) நாட்டின் இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார்.

தவிர அரசியலிலும் நன்கு அனுபவமுடையவர். ஆனால் கிம் இன் மகள் (Kim Ju Ae) சிறு குழந்தையாக உள்ளார். வட கொரிய அரசு ஊடகங்கள் அவரை ’அன்பான மகள்’என்றே குறிப்பிடுகின்றன. இதனால் ஜு ஏ  (Kim Ju Ae) அடுத்த அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்றே கணிக்கின்றனர். அதிபர் கிம் ஜாங் உன்னின் மூன்று குழந்தைகளில் கிம் ஜு ஏ (Kim Ju Ae) நடுத்தர குழந்தையாக அறியப்படுகிறார்.

2022 ஆம் ஆண்டு வரை வெளியுலகுக்கு வராத இவர் (Kim Ju Ae) அந்த ஆண்டு வட கொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்தபோது தந்தையுடன் தோன்றினார். அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக ராணுவ அணிவகுப்புகள் மற்றும் இதர நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

அதிலும் கடந்த செப்டம்பரில் அவர் (Kim Ju Ae) முதன்முறையாக சர்வதேச அளவில் தோன்றினார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள தந்தையுடன் (Kim Ju Ae) பெய்ஜிங்கிற்குச் சென்றமை பேசுபொருளாது. இவ்வாறான நிலையில் வடகொரியாவின் அடுத்த அதிபர், கிம் மகளா (Kim Ju Ae) அல்லது சகோதரியா எனும் வாதம் எழுந்துள்ளது.