மீனா மீண்டும் கர்ப்பமா? தீயாய் பரவும் தகவல்

0
978

நடிகை மீண்டும்  கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. நடிகை மீனா பல்வேறு மொழி படங்களில் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாரின் முறைப்பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

அதேபோல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் புரோ டேடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தீயாய் பரவி வருகின்றது. அதில் அவர் கர்ப்பமான வயிற்றுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லை. அது அவர் படத்துக்காக போட்ட கெட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

எனினும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.