பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்களோ அல்லது இலங்கை தமிழர்களோ பங்குபற்றி வந்த நிலையில் இந்த சீசனின் மட்டும் இலங்கையர்களோ, புலம்பெயர் தமிழர்களோ கலந்து கொள்ளவில்லை.
இரண்டு வீடு போட்டியாள்ர்களும் அதிக எண்ணிக்கையுடன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 பரபரப்பின்றி ஏனோதானோ என சென்று கொண்டிருக்கின்றது.
பிரதீப் வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்வினைகள்
வழமையாக இந்த நிகழ்ச்சியை விழுந்தடித்து பார்க்கும் புலம் பெயர் தமிழர்களில் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை காண ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பெண்களின் பாதுகாப்புக்காக என கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டமை நெட்டிசன்களுக்கு அவ்வளவு விருப்பமானதாக இருக்கவில்லை.
பிரதீப் ம்நிகழ்ழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்வினைகள் ஏற்படுத்தி வருகின்றது. சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது பிரதீப் வெளியேற்றப்பட்டமைக்கு நடுவரான கமலை பலரும் வசைபாடி வரும் சூழலில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதீப் அவருக்கு ஒரு குறும்படத்துடன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
பிரதீப் வெளியிட்டுள்ள பதிவில்,
பெரிய ரசிகன் சார் சத்தியமா சொல்றேன்… உங்களுக்கு 69வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என பதிவிட்டுள்ளார். அதோடு வசூல் ராஜா படத்தில் இடம் பெற்றிருந்த காட்சி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
Big fan sir @ikamalhaasan ❤️ Sathiyama soldren ❤️
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 7, 2023
Wish you the happiest 69th birthday. I have the utmost respect for your art and contributions to Tamil Cinema. Love you 😘#NallaIrunga #TheeraVisaripatheMeihttps://t.co/4UH1jF44Gj