சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த சத்யா சீரியலில் ரவுடி பேபி என்று கூப்பிட்டு ரசிகர்களை ஈர்த்தவர் ஆயிஷா. தற்போது பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.
ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ்
22 நாட்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் கமல் ஹாசனையே குறை கூறும் அளவிற்கு நடந்து கொண்ட பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நெட்டிசன்கள் அடுத்த வாரம் கண்டிப்பாக உன்னுடைய ஆட்டிட்டியூட்டிற்காக வெளியே அனுப்பனும் என்று கருத்து கூறி வருகிறார்கள். கதை சொல்லும் டாஸ்க்கில் என்னால் எதையும் கூற முடியாது என்று மழுப்பி வந்தார்.
இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் ஒரு பேட்டியொன்றில் ஆயிஷா பற்றிய உண்மைகளை கூறி வந்துள்ளார். அதில், ஆயிஷா கேரளாவில் இருக்கும் போது அவருக்கு 16, 17 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்கள் வீட்டினர். அதன்பின் 18 வயதில் ஆயிஷாவுக்கு இரண்டாவது திருமணமும் நடந்தது. அதன்பின் தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தார் என்று கூறியுள்ளார்.
இரண்டு முறை திருமணம்
அப்போது தான் நானும் ஆயிஷாவும் பழக ஆரம்பித்து பின் காதலித்தோம் . கல்யாணம் பற்றி பேச ஆயிஷா வீட்டிற்கு சென்றபோது என்னை டார்ச்சர் செய்து எதிர்த்தனர். அதன்பின் சீரியல் வாய்ப்பை ஆயிஷாவுக்கு நான் தான் வாங்கி கொடுத்தேன். இருவரும் பிரிய சத்யா சீரியலின் நடித்தா விஷ்ணு தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிஷாவுக்கு இந்து பையனுடன் தொடர்பு இருப்பதாகவும் Y என்ற எழுத்துடன் கூடிய செயினை கழுத்தில் போட்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் பழகுபவர்களை கணவர் என்று கூறி தாலி வாங்கி தரச்சொல்லியும் கூறுவார். அப்படி என்னிடமும் நடந்து கொண்டார். தற்போது யோகேஷ் என்பவருடன் தொடர்பில் இருப்பதால் அந்த எழுத்தில் செயின் போட்டுள்ளார்.