மிரட்டும் கங்குவா; அசுர அவதாரத்தில் சூர்யா

0
301

நடிகர் சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் மிக பெரிய எதிர்ப்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தினை 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான இன்று நள்ளிரவு 12.01க்கு க்ளிம்ப்ஸ் வெளியானது.

ஏற்கனவே கடந்த 3 தினங்களாக கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. இந்த காணொளியை பார்க்கும் போது ஹொலிவுட் படங்களுக்கு நிகராக சண்டை காட்சிகள் மிரட்டுகிறது.

முக்கியமாக சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு, பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இதனை பகிர்ந்து ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.