தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி வாய்ப்பிற்காக நடிகர்களுடன் நெருக்கமாகவும் படுக்கை காட்சியிலும் நடித்து பிரபலமாகி விடுகிறார்கள்.
நடிகை இவானா
அப்படி சமீபத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படத்தில் தன்னுடைய 22 வயதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை இவானா. முன்னணி நடிகர்களின் படத்திற்கே டஃப் கொடுக்கும் விதமான லவ் டுடே படம் மிகப்பெரிய வரவேற்பு வசூலும் பெற்று வருகிறது. இப்படத்தில் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்க இயக்குனர் பிரதீப் எடுத்து வைத்துள்ளார். இப்படத்தில் இவானா படுக்கை காட்சியிலும் நடிகருடன் நெருக்கமான காட்சியிலும் நடித்திருப்பார்.
படுக்கை காட்சி
இது குறித்து இவானாவிடம் பேட்டியொன்றில் வீட்டில் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு இவானா, கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. இக்கதையை கேட்கும் போது என் வீட்டில் இதுகுறித்து முன்பே கூறியிருந்தேன் என்றும் கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பதில் தவறில்லை என்று கூறினார்கள்.
அதன்பின் அந்த காட்சியில் நடிக்க முதலில் பதட்டத்துடன் தான் இருந்தேன். அதன்பின் நடித்து கொடுத்தேன். இந்த காட்சி பெரியளவில் தவறாக விமர்சிக்கவும் கிடையாது என்று இவானா போல்ட்டாக பதிலளித்துள்ளார்.