95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை

0
23

வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், 2024 ஆம் ஆண்டில் 10 சந்தேக நபர்களும் 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு மீள அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதே காலகட்டத்தில், நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார். “2024 ஆம் ஆண்டில் 10 சந்தேக நபர்கள் சிவப்பு அறிவிப்புகள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 2025 ஆம் ஆண்டில் பேரும் திருப்பி அனுப்பட்டனர். 2024 மற்றும் 2025 க்கு இடையில் 21 சந்தேக நபர்கள் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்டனர்” என்று பொலிஸ ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி வெளிநாடுகளில் ஒளிந்து கொண்டிருக்கும் மற்றும் ஒன்லைன் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இதன் விளைவாக இன்று வரை 95 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளின் விளைவாக இரண்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.