யாழ் தையிட்டி போராட்டத்தில் சர்வதேச ஊடகவியலாளர்; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை!

0
9

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தில் சர்வதேச ஊடகவிலாளரிடம் வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கடந்த 31.01.2025 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.