தீவிரமடையும் யுக்திய தேடுதல் நடவடிக்கை: உளவுத்தகவல்கள் அதிகரிப்பு

0
329

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள யுக்திய என்னும் தேடுதல் நடவடிக்கைக்கு பெரும் எண்ணிக்கையிலான உளவுத்தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலான இரண்டாயிரம் உளவுத்தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான போதைப்பொருள் வர்த்தகர்கள் தாங்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் வசித்த பிரதேசங்களை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்