எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படலாம் எனத் தகவல்

0
627

எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை குறைப்பு இன்று (1) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எரிபொருளின் விலையை பத்து முதல் இருபது ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

ரணிலின் அதிரடிகள்! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படலாம் எனத் தகவல் | Fuel Prices Again Reduced

நாட்டில் எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.