இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பாக வெளி வந்த தகவல்

0
738

இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.