எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகிய தகவல் தவறு!

0
653

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது.

இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐஓசி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.