ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகளின் செயற்பாடு குறித்து திலித் எம்.பி. வெளியிட்ட தகவல்

0
23

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகள் குழு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அழிவுகரமான முறையில் செயல்படுத்தியதை சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கண்டித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திலித் எம்.பி அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் 22 மில்லியன் மக்களுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

நட்பு நாடுகள் கூட இலங்கை தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கும் துரோகம் எனவும் பதிவிட்டள்ளார்.

சர்வதேச சமூகத்தின் முன் நாட்டின் முன்னுரிமைகள் குறைமதிப்படுத்தப்படுவது தற்போதைய அரசின் பலவீனமும் திறமையின்மையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.