கருத்தரிக்க முடியாத மருமகள்: மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த 56 வயது தாய்!

0
266

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாத்தா, பாட்டியின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு இந்திய குடும்பத்தில் தாத்தா பாட்டி தங்கள் பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொல்கிறார்கள், தாலாட்டுப் பாடுகிறார்கள், மாறி மாறி தங்கள் பேரக்குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள்.

ஆனால் இந்த சம்பவம் இவை அனைத்திலிருந்தும் வித்தியாசமானது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் பாட் எயானவர் தனது பேரக் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. நான்சி ஹேக் என்ற பெண்ணுக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் உள்ளனர்.

மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத நிலையில் அவருக்காக வாடகைத் தாயாக நான்சி மாறியுள்ளார். இவருக்கு ஹன்னா என்ற அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தனது மகன் மற்றும் மருமகள் குழந்தைக்காக ஏங்கியது தனக்கு வருத்த அளித்ததாக தெரிவித்த நான்சி அவர்கள் மகிழ்ச்சிக்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். நான்சி தனது மகன் மற்றும் மருமகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சமூக வலைத் தளமான இன்ஸ்டாகிராமில் நான்சி தனது குடும்பத்தினருடன் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த குடும்பம் மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்படுகிறது.