முதன்முறையாக கருணைக் கொலைக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி 

0
14

கருணைக் கொலை செய்வதற்கு  முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றம்  இன்று  புதன்கிழமை  அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் ஒரு நபரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக விவாதிக்கப்படும் இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் கருணைக் கொலை தொடர்பான முழுமையான சட்டம் இயற்றுவதற்கு பரிசீலிக்குமாறும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

அவரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கும் இந்த செயல்முறை முழுவதும் நோயாளரின் கண்ணியம் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்கும் குறிப்பிட்ட திட்டத்தை தயார் செய்யுமாறு டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.