டெஸ்லா நிறுவனத்தின் உயர் பதவியில் இந்தியர் நியமனம்!

0
244

அமெரிக்க நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் அண்மைக் காலமாக இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளி நபரான 45 வயதான வைபவ் தனேஜா Vaibhav Taneja தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அந்த பொறுப்பில் உள்ள சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ள வைபவுக்கு கணக்கியல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

மேலும் இவர் தொழில்நுட்பம், சில்லரை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.