இந்தியா – சென்னை துறைமுகத்தில் இருந்து இன்றைய தினம் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளவற்றை அனுப்பி வைக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 டன் அரிசி, 15 கோடி ரூபா பெறுமதியான 500 டன் பால்மா, 28 கோடி ரூபா பெறுமதியான 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்றைய தினம் இலங்கை நோக்கி பயணிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
