சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பிற்கு இந்தியாவே காரணம்: மிலிந்த மொரகொட

0
355

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல் ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களை வழங்கி இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.

இந்தியா அந்த ஆதரவை வழங்கவில்லை என்றால் இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு சென்றிருக்கும் என்றும் மொரகொட தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பிற்கு இந்தியாவே காரணம்: மிலிந்த மொரகொட | Imf Bailout Sri Lanka Latest News

நாணய நிதிய பிணை எடுப்பு

இதில் எந்த கேள்வியும் இல்லை. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு இந்தியாவினால் மட்டுமே சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் குறித்து அவர் சூசகமாக குறிப்பிட்ட போதும், விபரங்களை வெளியிடவில்லை.

சீனாவுடனான இலங்கையின் உறவுகள் மற்றும் கடந்த ஆண்டு நெருக்கடிக்கு சிலர் குற்றம் சாட்டிய ‘கடன் பொறி’ குறித்தும் மொரகொட கருத்துரைத்தார்.

இலங்கையின் கடன் பொறி என்பது இலங்கையின் செயற்பாட்டால் ஏற்பட்டது என்றும் அதற்கு வேறு எவரும் காரணம் அல்ல என்றும் மொரகொட குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பிற்கு இந்தியாவே காரணம்: மிலிந்த மொரகொட | Imf Bailout Sri Lanka Latest News