இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா!

0
672

இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான யூரியாவை பெற்றுக்கொள்வது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.