ஜி- 20 உச்சி மாநாட்டிற்கு தயாராகும் இந்தியா

0
262

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அப்போது இந்தியாவின் ஆற்றல் தெரிய வரும் என்று பிரதமர் மோடி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (27.08.2023) காலை 11 மணியளவில் 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதன் போது சந்திராயன்-3 விண்கல வெற்றியானது பல வகையான கொண்டாட்டங்களை சேர்த்துள்ளது.

ஜி- 20 உச்சி மாநாட்டிற்குத் தயாராகும் இந்தியா | Modi Commented On The Success Of Chandrayaan 3

நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கி 3 நாட்களுக்கும் மேலாகி விட்டன. இந்த வெற்றி மிக பெரியது. அதுபற்றி எவ்வளவு பேசினாலும் மிகையாகாது.

தற்போது வளர்ச்சி கண்டுள்ள இந்தியாவானது,எவ்விதமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியாவின் சந்திரயான்-3 விண்கல திட்டம் அமைந்துள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நான் பேசும்போது ஒரு தேசிய பண்பாக பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நாம் வலிமைப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.

பெண் சக்தியின் திறமையானது சேரும்போது, முடியாததும் சாத்தியப்படும். பெண் சக்திக்கு சந்திராயன் திட்டமும் ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நேரடியாக தொடர்புடையவர்களாக இருந்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் ஆற்றல் எதிர்வரும் செப்டம்பரில் தெரிய வரும்.

ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாட்டுக்கு இந்தியா முழு அளவில் தயாராகி வருகிறது. 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு வருகை தர உள்ளனர். ஜி-20 உச்சி மாநாட்டின் வரலாற்றில் பெரிய அளவிலான பங்கேற்பாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.