அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்காரணமாக எதிர்காலத்தில் இலங்கை சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
இந்திய அதானி நிறுவனம் காற்றாலை மின் திட்டங்கைளை கைவிட்டு, இந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போதைய அநுர அரசாங்கம் அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.