அனுரகுமார திசாநாயக்கவுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா..! எழுந்துள்ள குற்றச்சாட்டு

0
224

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த போது 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வலஹங்குவே தம்மரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு

300 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணம் ஜே.வி.பிக்கு கிடைத்துள்ளதாக தமக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு | Jvp Got 300 Million

89-90ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரை கூட கொண்டுவரக் கூடாது என ஜே.வி.பி. இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை பின்பற்றியது என என தெரிவித்துள்ளார்.

துறைமுகம், விமான நிலையம், வங்கிகள், மின்சாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்க்பபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உள்நாட்டு சொத்துக்கள் விற்பனை செய்வதனை எதிர்த்த ஜே.வி.வி. தற்பொழுது விலை மனுக் கோரி விற்பனை செய்யுமாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சொத்துக்களை விற்று தரகு

தரகுப் பணத்திற்காக ஜே.வி.பி இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை கண்டு கொள்ளாத அரசாங்கத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை என மிஹிந்தலை விஹாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.