போரில் சிக்கித் தவிக்கும் உக்ரைனுக்கு அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
உக்ரைனுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்குமார் ஜெயின் (Harsh Kumar Jain) 7 ஆயிரத்து 725 கிலோ கிராம் எடையுள்ள மருத்துவப் பொருட்களை அந்நாட்டு சுகாதார துணை அமைச்சர் ஒலெக்ஸி யாரென்கோவிடம் (Oleksy Yarenko) வழங்கினார்.

ரஷ்யா – உக்ரைன் மோதலால் வளரும் நாடுகளிலும் உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்துவதாக குறிப்பிட்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் பொருளாதார சவால்களை தணிக்கவும், மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை கையாள்வதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.