யாசகர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு..

0
201

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமூக சேவை திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

65 மாநகரசபைகள் மற்றும் நகர சபைகளை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி 

குறித்த ஆய்வில் சுமார் 3700 யாசகர்கள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் மட்டும் 1600 யாசகர்கள் இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரிற்கு அண்மையில் சுமார் ஆயிரம் யாசகர்கள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Beggers Srilanka

பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சில நிறுவனங்கள் மூடப்பட்டதன் காரணமாக பணியிலிருந்து நீங்கிய பலர் யாசகம் செய்வதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது