மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கோழி இறைச்சி விலை 50 ரூபா அதிகரிப்பு

0
576

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 1,450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ,ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் கோழி இறைச்சி விலை 50 ரூபா அதிகரிக்கப்படுவதாக கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

15 பாரிய கோழிப்பண்ணையாளர்கள் எடுத்த முடிவின்படி கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் “தேவைக்கு ஏற்ப, தேவையான கோழி இறைச்சி இருப்பு உள்ளது. நாங்களும் அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, கோழி இறைச்சிக்கு 50 ரூபா விலை உயர்வை அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாரிய அளவிலான விவசாயிகள் எப்போதும் விலை நிர்ணயம் குறித்து கூட்டு முடிவுகளை எடுப்பார்கள். இதன் விளைவாக, நுகர்வோர் எங்களை விமர்சிக்கிறார்கள்.

இலங்கையில் கோழி இறைச்சி பிரியர்களுக்கு இப்படி ஒரு சோதனை | Such A Test For Chicken Lovers In Sri Lanka

இந்நிலையில், கோழி தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், முட்டைக்கு விதித்துள்ளதை போல், கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்ய, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இல்லையெனில், தொழில் நலிவடைந்து, கோழிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கோழி இறைச்சி பிரியர்களுக்கு இப்படி ஒரு சோதனை | Such A Test For Chicken Lovers In Sri Lanka