யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தந்தையொருவர் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். இணுவில் பகுதியில் 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.