யாழ் பல்கலைக்கழகத்தில் பெண் சட்டத்தரணி சுவாஸ்திகாவால் மீண்டும் சலசலப்பு!

0
172

சட்டத்தரணி சுவாஸ்திகா மீண்டும் தனது உரையினை வழங்க யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார்.

யாழ் பல்கலையில் பெண் சட்டத்தரணியால் மீண்டும் சலசலப்பு! | Students Riot In Jaffna Polytechnic

 சட்டத்தரணி சுவாஸ்திகா நிகழ்ச்சிக்கு இடையூறு

இதன்போது மாணவர்கள் சிலரால் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா மீண்டும் தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமெனத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட குறித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டமானது மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.