திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
552

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது ஆலயம் வரும் பக்தர்கள் தமது ஆடை விடைங்களில் எமது தமிழர் பாரம்பரியத்தை மதித்து கடைப்பிடிக்க வேண்டுமென ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மையை பேணும் பொருட்டு ஆடைகளை அணிந்து வருமாறு இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | Important Notice For Devotees Thirukkedeeswaram
Gallery