இலங்கை திரைப்படத்துறை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை!

0
212

இலங்கையின் திரைப்படத் துறையை விருத்தி செய்வது குறித்து ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இவ் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இலங்கை திரைப்படத்துறை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை! | Action Taken Into The Sri Lankan Film Industry

நாட்டில், விசேடமாக சினிமாத்துறை சுருங்கிவரும் போக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் 5 அல்லது 6 திரையரங்குகள் மூடப்படுவதாவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டினால் திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கும் நிதியின் பகுதி தொடர்பிலும் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை திரைப்படத்துறை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை! | Action Taken Into The Sri Lankan Film Industry

திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கொண்டுவருவதற்கு பதிவுசெய்யும் கட்டணம் மற்றும் ஒரு திரைப்படத்துக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் அறவிடும் கட்டணம் திருத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரேரிக்கப்பட்டது.

இதேவேளை, நெட்ப்ளிக்ஸ் போன்றவை பிரபல்யம் அடையும் நிலையில் அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படும் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.