உனக்காக எந்த உயரத்துக்கும் செல்வேன்: வித்தியாசமாக காதலிக்கு ப்ரபோஸ் செய்த இளைஞன்!

0
109

காதல் என்றாலே அதுவொரு வித்தியாசமான உணர்வுதான். காதலிப்பதும் சுகம் தான் காதலிக்கப்படுவதும் சுகம் தான். இப்படிப்பட்ட காதலை தன் துணையிடம் எப்படி வித்தியாசமாக வெளிப்படுத்துவது? எப்படி காதலை ஏற்க வைப்பது என தலையைப் பிய்த்துக் கொள்வோம் இல்லையா? அப்படி அமர்ந்திருந்து சிந்தித்த ஒரு இளைஞன் வித்தியாசமான முறையில் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதாவது பிங்க் மற்றும் சிவப்பு நிற பலூன்களில் அவரது காதலியின் பெயரைப் பொறித்ததோடு காற்றில் பறக்கும் என் காதலே என் உயிரே அவளது காதலுக்காக எந்த உயரத்துக்கும் செல்வேன் எனக் கூறி தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான பலூன்களை காற்றில் பறக்க விட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் அந்த யுவதி ஒரு அன்பான காதலனைப் பெற்றாள் என் கூறி வருகின்றனர். அந்த யுவதி காதலனின் காதலை ஏற்றிருப்பாரா? இப்படி செய்தால் யார் தான் ஏற்காமல் இருப்பார்கள்?