என்னை அடிச்சு சாவடிச்சு வேணும்னா இந்த இடத்தை எடுத்துக்கோங்க? பிரதீப் ஆவேசம்

0
207

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் பிரதீப் ஆண்டனி டைட்டிலை வென்றே ஆக வேண்டும் என்கிற உறுதியில் இருப்பது இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் தெரிய வந்திருக்கிறது.

பிக் பாஸ் 7 வீட்டில் தினமும் ஏதாவது டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ரேங்க் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிக்ட் ஆகிற வாய்ப்பு இருக்கிறதையும் குறிக்கும்.

அவர் அப்படி சொன்னபோது முதல் ரேங்க் இடத்தில் பிரதீப் ஆண்டனியும், 15வது ரேங்கில் வினுஷா தேவியும் நின்று கொண்டிருந்தார்கள்.

இந்த வாரம் வினுஷா தேவி தான் வெளியே போகிறார் என்ற பேச்சு கிளம்பிவிட்டது. ரவீணா விதிமுறைகளை கூறி முடித்ததுமே வேலையை ஆரம்பித்தார் நிக்சன். என்டர்டெயின்மென்ட்டா பெருசா நீங்க இங்க எதையும் பண்ணலனு நினைக்கிறேன் என பிரதீப் ஆண்டனியிடம் நிக்சன் கூறினார்.

நீ பாடியதை விட இந்த வீட்டில் நான் நிறைய பாடியிருக்கிறேன் என நான் நம்புகிறேன் என்று பிரதீப் கூறியதை கேட்ட நிக்சனுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிரதீப் சொல்வதும் உண்மை தான்.

ராப்பரான நிக்சன் பெரிதாக பாடவே இல்லை. ஆனால் நடிகரான பிரதீப் தினமும் அழகாக பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறார்.

சக போட்டியாளரின் மனதை புண்படுத்தியிருக்கிறீர்கள் என விஷ்ணு தானாக வந்து பேச, நான் ப்ரோமோவுக்காக எல்லாம் கேம் ஆட வரலனு அவரையும் ஆஃப் செய்தார் பிரதீப்.

ஐஷு சொன்னா நான் லோ கிளாஸ்னு. நீங்க எல்லாம் ஏழைகள் என்றால், நான் யாருனு எனக்கு புரியவே இல்லை. பிச்சைக்காரனா? நான் ஒரு பெரிய ஆர்டிஸ்டா மாறிக் காட்ட எனக்கு இந்த காசு தேவை.

இந்த இடத்தை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னை அடிச்சு சாவடிச்சு வேணும்னா இந்த இடத்தை எடுத்துக்கோங்க என பிரதீப் ஆவேசமாக சொல்வதுடன் ப்ரோமோ முடிந்துவிட்டது. இன்றைய நிகழ்ச்சியில் தான் யாருக்கு முதலிடம் கிடைத்தது என்பது தெரியவரும்.