
சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் அபாயம் இருப்பதால், இறந்த பறவையைக் கண்டால், அதைத் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இடம்பெயர்வு வழித்தடங்களில் சில இறந்த காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் அவை மனிதர்களுக்கு தொற்றும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது.
இருப்பினும் உள்நாட்டு வளர்ப்பப் பறவைகளில் தொற்றும் அபாயம் இருப்பதால் நீண்டகால பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மட்டுமின்றி கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும் எனவும் துர்காவ் மண்டல நிர்வாகம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இரண்டாவது பறவையில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பெடரல் அரசும் மண்டல நிர்வாகங்களும் பறவை காய்ச்சல் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுத்தியுள்ளனர்.
மேலும், இறந்த பறவைகளை பொதுமக்கள் காண நேர்ந்தால், அவைகளை அப்புறப்படுத்தவோ தொடவோ கூடாது எனவும், உரிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கோழி இறைச்சிகள் மற்றும் முட்டை போன்ற தயாரிப்புகளை இன்னும் பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.