தன் மனைவியால் (Limini Weerasinghe) தான் செல்வந்தனாகியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தமது பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்ற சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சொத்து விபரங்களில் உள்ளடக்கியுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.
அதோடு சட்ட விரோதமாக சொத்துக்களை கொள்வனவு செய்ததில்லை எனவும் மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட விடயங்களில் முதலீடு செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியாக தாம் செயல்பட்டுள்ளதாகவும் ஆலோசனை சேவை வழங்கியுள்ளதாகவும் அதற்காக வரி செலுத்தி உள்ளதாகவும் வரி அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குடும்பத்தினரிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற சொத்துக்கள் தொடர்பிலும் தான் தகவல் வழங்கியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.