நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? – சாணக்கியன்

0
253

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சனல் 4 இல் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை கோரி எஸ்.எம்.மில் பதிவிட்ட பல இளைஞர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ள போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறவில்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? | If This Status Judge What Is Common Peoples

நாட்டைவிட்டு வெளியேறிய நீதிபதி

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அது தொடர்பிலேயே மேற்படி கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பியுள்ளார்.  

நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? | If This Status Judge What Is Common Peoples