Home Breaking News மாளிகைகளை ஆக்கிரமிக்க வந்தால் கை, கால்களை உடைத்துக் கொள்ள நேரிடும்; எம்.பி சனத் நிஷாந்த
போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதில் பிரச்சினையில்லை.
ஆனால் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை உட்பட அரச அலுவலகங்களை ஆக்கிரமிக்க வந்தால் கை, கால்களை உடைத்துக் கொள்ள நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் விரும்பியபடி அமைதியான போராட்டத்தை நடத்தலாம். ஆனால் சண்டித்தனம் செய்ய முடியாது.
அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றைத் இனி தொட்டுப் பார்க்க வந்தால் கைகால்களை உடைத்துக் கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.