முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வர விரும்பினால் அவருக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பெண் எம் பி ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல இதனை தெரிவித்துள்ளார் .
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது வேறு எவருமோ இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருவாரா… மாட்டாரா
எனினும், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர் இதுவரை கட்சியில் அப்படியொரு கதை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் கோட்டாபய நாடாளுமன்றத்துக்கு வருவார் என்ற பேச்சு சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொய்யாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
