புதிய யாப்பு தயாரிக்கும் ஐ.தே.க; உருவாக்கப்படுகிறது அதிகாரமிக்க விசேட குழு

0
224

ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு லேக்ஹவுஸ் கட்டடத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சிக்கான புதிய யாப்பு நிறைவேற்றப்படவுள்ளதுடன், அதிகாரமிக்க புதிய குழுவொன்றும் உருவாக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கட்சியின் தலைவர், தவிசாளர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகள் அனைத்தும் இல்லாதொழிக்கப்படும்.

கட்சியையும் அதன் செயல்பாடுகளையும் வழிநடத்தும் வகையிலேயே இந்த அதிகாரமிக்க புதிய குழு உருவாக்கப்படவுள்ளது.

இல்லாதொழிக்கபடும் பதவிகளை வகித்த முக்கிய உறுப்பினர்களுக்கும் கட்சியின் செயற்பாட்டு சிரேஷ்டர்களுக்கும்  இந்த குழுவில் உள்வாங்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதால் கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுப்பது கடினமாக உள்ளதன் பிரகாரமே இவ்வாறு புதிய அதிகாரமிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.