பாலஸ்தீன மக்களின் விடியலுக்காக இலங்கை மக்களுடன் நான் நிற்பேன்; சஜித் உறுதி

0
196

பாலஸ்தீன மக்களின் விடியலுக்காக இலங்கை மக்களோடு தாமும் என்றும் முன்நிற்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்யை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார்.

“உலகின் கடைசி ஆக்கிரமிப்பு நாடான பலஸ்தீன தேசத்தினதும் மக்களினதும் விடியலுக்கான தீர்வாக ஐக்கிய நாடுகள் சபை இறுதியாக நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சட்டங்கள், சர்வதேச சமவாயங்கள், மனித உரிமை பிரகடனங்களை நடைமுறைப்படுத்த சர்வதேசம் அர்ப்பணிப்புடன் தலையிட வேண்டும்.

இவ்விவகாரத்தில் சில நாடுகளின் ஒரு தலைபட்ச போக்குக்கு இடமளிக்க முடியாது என்றும் அமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட சர்வதேசம் கூடிய கரிசனையோடு செயற்பட உலக தலைவர்கள் முன்வர வேண்டும்

பாலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும் ஜனநாயக ரீதியிலான தீர்விலேயே விடியலை எதிர்பார்க்கின்றனர்.

பேச்சு மேசைக்கு வந்து சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் இப்பிரச்சினையை தீர்க்க உலக தலைவர்கள் வரலாற்றை ஆய்ந்து சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.

1948 அரபு-இஸ்ரேல் போர் மற்றும் அதைத் தொடர்ந்த மோதல்களுக்குப் பிறகு அதிலிருந்து இன்று வரை பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற விடயத்தின் அடிப்படையில் மோதல்கள் துரதிஷ்டவசமாக விரிவடைந்து சென்றாலும், இஸ்ரேலுக்கு மாத்திரமன்றி அதிகாரம் படைத்த இஸ்ரேல் சார்பு குழுக்களுக்கும், அந்த சிந்தனை முகாமுக்கும் பலத்த அடியை ஹமாஸ் போராளிகளின் தாக்குதல் காண்பிப்பதாகவும் அம்முகாம் கண்ட பலத்த தோல்வியுமாகும்.

பலஸ்தீனில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடாகும் என்றும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதுடன் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் தேசியம், அரச நிருவாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இது சர்வதேச அளவில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும் என்றும் பன்முக பார்வையில் பலஸ்தீன சுதந்திர தேசத்திற்கு சர்வதேசம் தற்போதேனும் ஒன்றுபடாவிட்டால் மனிதாபினம் தோல்வியட்டதாகவே அர்த்தப்படும் என்றும் மனிதாபின தோல்விக்கு இதை விட முன்ணுதாரனம் வேறில்லை.

இலங்கை உங்களுடன் இருக்கின்றது என்பதை பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.