பூச்சாண்டிகளுக்கு நான் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை: வியாழேந்திரன் தெரிவிப்பு

0
112

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் காணி உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை இன்று இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் 20இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டதுடன் இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.