எனக்கு நயன்தாரா வேணும் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? ADMK MP சர்ச்சை பேச்சு!

0
25

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் திமுக அதிமுக மற்றும் தவெக கட்சி என்பன முதலமைச்சர் கதிரையை பிடிப்பதற்கு கடும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளமை சர்ச்சையாகிவிட்டது. இது தொடர்பில் இந்திய  ஊடகங்கள் குறிப்பிடுள்லதாவது, நேற்றையதினம் நடந்த அதிமுக போராட்டத்தில் பேசிய சிவி சண்முகம்,

‘அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை நிறைவேற்றுகிறேன். உங்கள் கனவை சொல்லுங்கள்’ என சொல்கிறார். எனக்கு நயன்தாரா வேணும். அதை அவர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை எனக்கு கல்யாணம் பண்ணிவை என்று ஒருத்தன் வருவான். அது நிறைவேற்றுவாரா?. என நக்கலாக பேசினார்.

அதுவும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒரு போராட்டத்தில் சண்முகம் இப்படி பேசியதை எதிர்ப்பை பெற்றது. இதையடுத்து சண்முகத்தின் பேச்சுக்கு பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள சண்முகம் ‘நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டு விட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.

முற்றிலும் தவறுதலாகவே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவிட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை’ என கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை சமீபகாலமாக அரசியல் பிரமுகர்கள் நடிகைகள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகிவிட்டது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜயை நடிகை திரிஷாவோடு இணைத்து பேசி கடுமையான எதிர்ப்பை எதிர்நோக்கிய பின்னர் வருத்தமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.