அப்பா இறப்பை இன்னும் என்னால் கடந்து வர முடியவில்லை; கவீன் திருமணத்திற்கு பிறகு மனம் திறந்த லொஸ்லியா

0
236

என் அப்பாவுடன் நேரில் இறுதியாக பேசியதே அந்த பிக் பாஸ் வீட்டில் தான் என்று பிக் பாஸ் புகழ் லொஸ்லியா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லொஸ்லியா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரபல யூடியூப் ஒன்றுக்கு மனம் திறந்து பேசி உள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

என் அப்பாவின் மறைவால் நான் மிகவும் உடைந்துவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் அப்பாவை பார்க்க முடிந்தது அவர் கூட இருக்க முடிந்தது. நான் வெளியில் வந்த போது அப்பா கனடா சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டார். அவருடன் பேசியதே அந்த பிக் பாஸ் வீட்டில் தான். அவர் இறந்து இரண்டு வருடம் ஆன போதும் இன்னும் என்னால் அதை கடந்து வரமுடியவில்லை.

 Bigg Boss Losliya

அதே போல நிறையே பேரை நம்பி நான் ஏமாந்து இருக்கிறேன். அதை எல்லாம் ஒரு பாடமாகத்தான் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏமாற்றம் வர வர நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள முடியும். அதுபோலத்தான் நிறைய போர் என்னுடன் இருந்து கொண்டே துரோகமும் செய்து இருக்கிறார்கள் என்றார்.

இதையடுத்து கவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த லொஸ்லியா, அவர் நல்ல படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதே போல தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்ல முடிவு எடுத்து திருமணம் செய்து இருக்கிறார். இரண்டுமே அவருக்கு நன்றாக போய் கொண்டு இருக்கிறது இதை நினைத்து நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து பேசிய லொஸ்லியா எனக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. இதனால், தனக்கு காதல் திருமணம் தான் நடைபெறும் என்றார்.